Wednesday, May 10, 2006

நான் கண்ட திருக்குறள்

குறள், என்றைக்கும் புதுமையான, இனிமையான, எளிமையான இரண்டடி இலக்கியம். இது என்றைக்கும் வாழ்க்கைக்கு பொருந்தும். இதன் வலிமை மிகவும் கடிது.

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"

இதோ இங்கே எனக்கு பிடித்த, அடிக்கடி நான் மேற்கோள் காட்டும் குறள்கள்


பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும்.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

இந்த குறள்களுக்கு விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

2 Comments:

At 9:44 AM, Blogger சிங். செயகுமார். said...

வலைபதிவின் வருகைக்கு வாழ்த்துக்கள் நண்பரே!

 
At 9:22 AM, Blogger நாமக்கல் சிபி said...

varuka! varuka! vaazthukkal!

aamam! ik kuralgalukku vilakkam thevai illai!

 

Post a Comment

<< Home