Friday, March 15, 2013

காலத்தின் ஓட்டமதில்

காலத்தின் ஓட்டமதில்
கண்ட பல கணவனைதும்
கடல் நீரில் கரைந்திட்டு
கரிப்பூடும் உப்பாக
காளை என் வாழ்வினில்
கலந்திட்டு நிற்குதடி - இனி
களிப்பென்ற சொல் ஒன்று
கனவாகிப் போனதடி !!

கண் மூடும் பொழுதெல்லாம் உன்
கவின் முகமே தோன்றுதடி
கவி எழுதும் என் மனமோ
கதை கதைத்து நிற்குதடி - இந்த
விடியல் கூட இரவாக தோன்றுதடி - இனி
உண்மை விடியலை என்று காண்பேனோ !!!

நான் நான் அல்ல நாம்

சமாதி உனக்கு அல்ல உன் 
உடலுக்கு தான் 
மறைந்தது நீ அல்ல உன் 
உடல் மட்டும் தான் 

நீ உறைந்தது கல்லறை அல்ல 
என்னுள் மட்டும் தான் 
இன்று நான் நான் அல்ல 
நீயும் தான் 
நான் காண்பது கனவு அல்ல உன் 
உணர்வுகள் தான் 

இனி யாராலும் பிரிக்க முடியாது நம்மை 
நான் நான் அல்ல நாம் !!

Saturday, March 10, 2007

ஆசை

"ஆசையே துன்பதிற்க்கு காரணம்"
சொன்னவர் புத்தர்.
யாரும் துன்பப்படக்கூடாது என்ற
ஆசையில் தான் சொன்னாரோ ?

- (சரவணகுமார், Since 1976)

Wednesday, May 10, 2006

நான் கண்ட திருக்குறள்

குறள், என்றைக்கும் புதுமையான, இனிமையான, எளிமையான இரண்டடி இலக்கியம். இது என்றைக்கும் வாழ்க்கைக்கு பொருந்தும். இதன் வலிமை மிகவும் கடிது.

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"

இதோ இங்கே எனக்கு பிடித்த, அடிக்கடி நான் மேற்கோள் காட்டும் குறள்கள்


பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும்.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

இந்த குறள்களுக்கு விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

Wednesday, April 19, 2006

காதல்

இன்னைக்கு ஒன்னும் தொனல ஆனால் மரதடியில் கிடைத்தது ஒரு கவிதை. இதோ நான் படித்த கவிதை..

காதல்கடலில மூழ்கினா முத்து
காதலில் மூழ்கினா பித்து

படிப்பைக் கொஞ்சம் யோசி
குடும்பத்தைக் கொஞ்சம் நேசி

சொந்தக் காலில் முதலில் நில்லு
அப்புறம் உந்தன் காதலைச் சொல்லு

இதுக்கு மேலும் வேணாம் மல்லு
அப்புறம் எகிறிப் போகும் உன் பல்லு

வயசானா உதவிடும் கைத்தடி
வெறுப்பேத்தினா அப்புறம் அடிதடி


- சரவண குமார்

Friday, November 11, 2005

தூத்துக்குடி பரோட்டா

தூத்துக்குடி என்னோட சொந்த ஊர், ஆனால் வேலை வெளியூர் என்பதால் ஆண்டுக்கு ஒரு முறை செல்வதுண்டு. இந்த வருடம் தீபாவளிக்கு சென்றிருந்தேன்.

ஒரு வருடத்தில் மாற்றங்கள் நிறைய தெரிந்தன. இன்றைக்கும் தூத்துக்குடி பரோட்டா சுவைக்கு வேரு எதுவும் இணை இல்லை.

ஆனால் ஒரே வருத்தம் என்னவெனில், தூத்துக்குடியில் இன்றைக்கும் குடும்பத்துடன் சென்று அமைதியாக சாப்பிட ஒரு ஓட்டல் இல்லை. அது என்னவொ அங்கு இன்னும் குடும்பதுடன் ஒட்டல் சென்று சாப்பிடும் வளக்கம் வெகுவாக வளரவில்லை. இருந்தாலும் சில ஒட்டல்கள் (பெல், நளாஸ், ஆர்சீஸ்) வளர்ந்துள்ளதையும் மறுக்க முடியாது.

அந்த சுவையான பரோட்டாவை சமைக்கும் ஆழ்வார், கனி மேலும் கண்னன் கடைகள் இதமான சூழழில் பரிமாற முன்வந்தால் நன்றாக இருக்கும்.

- சரவணா

Saturday, October 22, 2005

சிதறிட்ட நினைவலைகள்

சிதறிட்ட சாரலில்
தெறித்திட்ட நீர்துளியில் - பட்டு
பாய்ந்திட்ட வெள்ளொளியில் - விட்டு
பிறிந்திட்ட வண்ணங்களில்
ஒளிர்ந்திட்ட உன்னுருவில்
உறைந்திட்ட என் நினைவில்
கறைந்திட்ட கனவையெல்லாம்
முறைத்திட்ட உன்னப்பன்
கலைத்திட்டு போய்விட்டான்.

- சரவணா

வலைப்பின்னலுக்கு நல்வரவு !!

என்னுடய முதல் சோதனை தமிழ்ப்படைபு.

கிழக்கே உதிற்க்கும் சூரியனே
தினமும் வருவாய் என்வழியே !!!

நன்றி - சுரதா ( http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm )

- சரவணகுமார்